உளுந்து வடை சுவையாகவும் மொறு மொறுப்பாகவும் இருக்க….
உளுந்து வடை செய்யும் போது உளுத்தம் மாவு தளர்ந்து இருந்தால் சிறிதளவு பச்சரிசி மாவை அதில் தூவினால் உளுத்தமாவில் தேவைக்கு அதிகமாக உள்ள தண்ணீரை உறிஞ்சிவிடும். அல்லதுசோள மாவு (corn flour) சேர்த்தால் உடனடியாக ஊறி மாவு கெட்டியாவதுடன் சுவையும் அபாரமாக இருக்கும்.
வடை செய்வதற்கு வெள்ளை உளுந்தை போடாமல் கருப்பு உளுந்து உடைச்ச உளுந்து போட்டால் அதோட சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்
உடைத்த கருப்பு உளுந்தை ஊறவைத்து அதன் தோலை கழுவி எடுக்காமல் அப்படியே அரைத்து பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு கருவேப்பிலை சேர்த்து வடை செய்தால் வடை சுவையாகவும் மணமாகவும் கருப்பு உளுந்தின் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.
உளுந்து வடைக்கு அரைத்த மாவுடன் ஊறவைத்த பயத்தம் (பாசிப்) பருப்பைக் கலந்து வடை செய்தால் சுவையாகவும் மொறு மொறுப்பாகவும் இருக்கும்.
உளுந்தம் பருப்பை வடைக்கு அரைக்கும் போது பச்சரிசியையும் கொஞ்சம் சேர்த்து அரைத்தால் வடை மொறுமொறுவென்று இருக்கும். அதே போல் வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமானால் சிறிது அரிசிமாவினை சேர்த்தால் கெட்டியாகிவிடும்.
0
Leave a Reply